×

பஹத் பாசில் வீட்டில் வருமானவரி ரெய்டு

சென்னை: பஹத் பாசில் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தமிழில் வேலைக்காரன், விக்ரம் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பஹத் பாசில். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில், மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். மலையாள பட உலகை சேர்ந்தவர்களிடம் கறுப்பு பணம் புழங்குவதாக வந்த தகவல்களால் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் பஹத் பாசில் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வருமானம், முதலீடுகள் பற்றி பஹத் பாசிலிடம் விசாரித்துள்ளனர். பிறகு வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஹத் பாசிலிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு பஹத் பாசில் பதிலளித்துள்ளார். அடுத்தடுத்து மலையாள நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் பல நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Bahad Basil ,
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி