×

ஆயிரம் கோடியை தாண்டிய ‘பதான்’

பாலிவுட் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘பதான்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பிறகு சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் 8 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியானது.

கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், ‘பதான்’ படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இது கடந்த 21ம் தேதி நிலவரம். தற்போது ஆயிரம் கோடியையும் தாண்டி ‘பதான்’ வசூலித்து வருவதால், படக்குழுவினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Pathan ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...