×

சிங்கம்புணரி அருகே ஊரணிக்கு தடுப்பு சுவர் இல்லாததால் தடுமாற்றம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி எதிரே நல்லபாகன் ஊரணி உள்ளது. இந்த ஊரணிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஊரணியை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லை. மழைக்காலங்களில் ஊரணியில் தண்ணீர் நிறைந்து இருப்பதால் பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் மணவர்களின் நிலை குறித்து அச்சத்துடனே இருக்கும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அதிவேக வாகனங்கள் ஊரணி வளைவில் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் ஊரணியை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சிங்கம்புணரி அருகே ஊரணிக்கு தடுப்பு சுவர் இல்லாததால் தடுமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Singhamburi ,Singamburi ,Government ,Primary School ,Kirunkakotta Puradi ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...