×

லிப் டூ லிப் காட்சியில் நடித்தது ஏன்?.. அனிகா பதில்

சென்னை: அறிமுக படத்திலேயே லிப் டூ லிப் காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார் அனிகா. என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா. தற்போது 18 வயதாகும் அனிகா, தெலுங்கில் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்தார். இது மலையாளத்தில் வெளியான கப்பேலா படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தையடுத்து மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் அனிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் மெல்வின் பாபு அவருக்கு ஜோடி. ஆல்ப்ரெட் சாமுவேல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ஹீரோவுக்கு அனிகா லிப் டூ லிப் கிஸ் தரும் காட்சியில் நெருக்கமாக நடித்துள்ளார். இதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். அனிகா கூறும்போது, ‘இந்த படம் முழுநீள காதல் கதை. அதில் முத்தக் காட்சி என்பது தவிர்க்க முடியாதது. இயக்குனர் கதை சொல்லும்போது, இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தை கூறியிருந்தார். கதைக்கு தேவையென்பதால் இதில் நடித்துள்ளேன். இதில் துளியும் ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும்போது அது ரசிகர்களுக்கு புரிந்துவிடும்’ என்றார்.

Tags : Anika ,
× RELATED நாயன்மார் பூஜித்த திருமால்