×

திறமைக்கு தமிழ் சினிமாவில் மதிப்பில்லை : வரலட்சுமி வேதனை

தற்போது அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, அதன் காரணமாக ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். இந்நிலையில் அவர் தமிழில் நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

வரலட்சுமியுடன் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ் நடித்துள்ளனர். படம் குறித்து வரலட்சுமி கூறியதாவது: கன்னடத்தில் ஹிட்டான ‘ஆஹால ராத்திரி’ படத்தின் ரீமேக்கான, இந்த கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒரு இரவில், ஒரு வீட்டில் நடக்கும் திரில்லர் கதை. இதற்கு முன்பு இதுபோன்ற திரைக்கதை யுக்தியில் எந்தப் படமும் வந்ததில்லை.

இதில், நான் மல்லிகா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். என்னைச் சுற்றி முழு கதையும் நடக்கும். தற்போது நான் தெலுங்கிற்கு அதிக முக்கியத்தும் தருவதாக சொல்கின்றனர். அது உண்மைதான். தமிழில் கடந்த 9 வருடங்களில் எனக்கு கிடைக்காத வாய்ப்பும், மரியாதையும், அன்பும் ஒரே வருடத்தில் தெலுங்கில் கிடைத்தது. தெலுங்கு ரசிகர்கள் என்னைக் கொண்டாடுகின்றனர்.

தமிழ் சினிமா திறமையான கலைஞர்களை மதிப்பதில்லை. அதனால்தான் அவர்களை இழந்து வருகிறது. திறமையானவர்கள் வேறுமொழியை நோக்கிச் செல்கின்றனர்.

Tags :
× RELATED சூர்யா என்ற பெயரை மாற்றாதது ஏன்? விஜய் சேதுபதி மகன் விளக்கம்