×

அபர்ணாவுக்கு கவின் சிபாரிசு

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்க, கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள படம், ‘டாடா’. கவின், அபர்ணா தாஸ் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அபர்ணா தாஸ் கூறுகையில், ‘ஹீரோயினாக நான் நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது என்பதால் ரொம்ப டென்ஷனாக இருக்கிறது.

கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து, படம் முடியும்வரை எனக்கு உறுதுணையாக நின்ற இயக்குனர் கணேசுக்கு நன்றி. என்னை இயக்குனரிடம் அறிமுகப்படுத்தியவர், கவின். அவர் இல்லை என்றால் இப்படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இப்படம் எனக்கு மிகச்சிறந்த தொடக்கமாக இருக்கும்’ என்றார். கவின் கூறும்போது, ‘கடந்த 4 வருடங்களாக ‘டாடா’ படம் மிகச்சிறப்பாக வருவதற்காக கடுமையாக உழைத்தோம்.

எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி. இதுபோன்ற கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட அபர்ணா தாசுக்கு நன்றி. அவரை விஜய்யின் ‘பீஸ்ட்’ ஷூட்டிங்கில் பார்த்தேன். ‘டாடா’ கதையில் நான் வைத்திருந்த நம்பிக்கையை அபர்ணா தாஸ் மீதும் வைத்தேன். அவரும் என் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார்’ என்றார். ‘லிப்ட்’ படத்துக்குப் பிறகு கவின் நடித்துள்ள இப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags : Gavin ,Abernah ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி