மதுரை: தொழிற்சாலை துவங்கிய பிறகு அனுமதி பெறலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பிற்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘‘‘தொழிற்சாலைகள் துவங்குவதற்கு முன் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். முறையான அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகள் மூடப்படும். இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறை ஓர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. முறையான அனுமதியின்றி தொழிற்சாலைகள் செயல்பட்டாலும், பிறகு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் மனுவிற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தனர்….
The post தொழிற்சாலை துவங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை appeared first on Dinakaran.
