×

50 ஸ்டன்ட் கலைஞர்கள் மோதும் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படம் 13 மொழிகளில் உருவாகிறது. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்று  தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இப்படத்தின்  வசன காட்சிகளை படமாக்கி விட்ட சிறுத்தை சிவா,  தற்போது சூர்யா நடிக்கும் ஆக்சன் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சி உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஸ்டன்ட் கலைஞர்கள் சூர்யாவுடன் மோதுவது போன்று பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. அதையடுத்த  விமான வடிவில் ஒரு செட்  அமைத்து அதற்குள் இன்னொரு அதிரடி சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

Tags : Surya ,
× RELATED இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை: திருச்சி சூர்யா பதிவு