- முகநூல்
- திருச்செங்கோடு
- ஷேக் மாதர்
- ஷேக் சிகந்தர்
- திருச்செங்கோடு தோண்டிகராடு, நாமக்கல் மாவட்டம்
- வீடற்ற சங்கம்
- காலனி
- லாரி...
- தின மலர்
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொண்டிகரடு, வீடில்லாதோர் சங்க காலனியை சேர்ந்த ஷேக் மதார் மகன் ஷேக் சிக்கந்தர்(39). லாரி டிரைவர். இவர் பேஸ்புக் மூலம் லாரிகள் வாடகைக்கு தேவை என்றும், அதிக வாடகை தருவதாகவும் தெரிவித்திருந்தார். கொரோனா காலத்தில் அதிக வாடகை கிடைக்கிறது என்று பலர், ஷேக் சிக்கந்தரிடம் தங்களின் லாரிகளை வாடகைக்கு கொடுத்தனர். டாஸ்மாக் சரக்குகளுக்காக லாரிகளை ஓட்டுவதாக ஷேக் சிக்கந்தர் அவர்களிடம் தெரிவித்தார். 3 மாத காலம் சரியாக வாடகையும் கொடுத்து வந்துள்ளார். பிறகு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார். பிறகு செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாரி உரிமையாளர்கள், நேரடியாக திருச்செங்கோடு வந்து அவரிடம் லாரிகள் பற்றி கேட்டபோது, லாரிகளை இன்ஜின் மற்றும் சேசிஸ் நம்பர் மாற்றி விற்பனை செய்து மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ், திருச்செங்கோடு நகர போலீசில் புகார் செய்தார். இவரை தொடர்ந்து மேலும் சிலர் புகார் அளித்தனர். அதன்பேரில், ஷேக் சிக்கந்தர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், இதுபோன்று 13 லாரிகளை விற்று பெரிய அளவில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புரோக்கர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11 லாரிகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக ஈரோடு வைராபாளையத்தை சேர்ந்த ரவி(43), ஸ்டேட் பேங்க் நகர் கண்ணன் (எ) பாகிருஷ்ணன்(55), திருச்செங்கோடு கொல்லபட்டியை சேர்ந்த நந்தகுமார்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட லாரிகளின் மொத்த மதிப்பு ₹2 கோடி ரூபாய் ஆகும். சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில், இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக ஷேக் சிக்கந்தர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். …
The post பேஸ்புக் மூலம் வாடகைக்கு எடுத்த லாரிகளை விற்று ரூ2 கோடி மோசடி: 11 லாரிகள் மீட்பு; 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.