×

கொரோனா 3ம் அலை அச்சம் உள்ள நிலையில் கன்வர் யாத்திரை தேவையா?…உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘கொரோனா 3ம் அலை ஏற்படும் அச்சம் உள்ள நிலையில் கன்வர் யாத்திரை தேவையா’ என உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கொரோனா முதல் அலை குறைந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் ஹரித்வாரில் கும்பமேளா நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மார்ச் மாதம் 2வது அலை தொடங்கிய நிலையில், சமூக இடைவெளி, மாஸ்க் அணியாமல் ஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை எழுப்பியது. இதனால் கும்பமேளாவில் பாதியிலேயே பக்தர்கள் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்து கடவுளான சிவன் பக்தர்கள் இரண்டு வாரம் நடத்துவது தான் கன்வர் யாத்திரை. இந்த ஆண்டு ஜூலை 25 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் வரை நடக்கும். பாத யாத்திரையான இதில் உத்தரகண்ட் உள்ளிட்ட இதர பகுதிகளிலிருந்து கங்கை புனித நீரைப் பக்தர்கள் சேகரிப்பார்கள். இந்த யாத்திரையை உத்தரகாண்ட் மாநில அரசு ரத்து செய்தது. ஆனால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் கன்வர் யாத்திரையை நடத்துவதாக அறிவித்துள்ளது.இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், நேற்று நடத்திய விசாரணையில் பல்வேறு கேள்விகளை உபி அரசுக்கு எழுப்பியது. அதில்,‘‘எதன் அடிப்படையில் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் இத்தைகைய செயல்பாடு என்பது சரியானதா’’ என கேட்டு, உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.* கன்வர் யாத்திரை பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் அதை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக உபி அரசு கூறி உள்ளது.* யாத்திரையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படும்.* யாத்ரீகர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.* அனைவரும் மாஸ்க், சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படும் என உபி அரசு உறுதி அளித்துள்ளது….

The post கொரோனா 3ம் அலை அச்சம் உள்ள நிலையில் கன்வர் யாத்திரை தேவையா?…உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Kanwar Yatra ,3rd Wave of Corona ,Court ,Uttar Pradesh Govt. New ,Delhi ,Kanwar ,Supreme Court ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...