×

நடிக்கத் தயங்கிய யோகி பாபு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ், யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்க, கதை எழுதி ஷான் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் சுபத்ரா ராபர்ட், பேபி ஸ்ரீ மதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, லில்லி ஜான், ரமணியம்மா நடித்துள்ளனர். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் பிப்ரவரி 3ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஷான் கூறுகையில், ‘யோகி பாபுவிடம் கதை சொல்லிவிட்டு, நீங்கள்தான் கதையின் நாயகன் என்றபோது தயங்கினார். பிறகு நான், இது ரொம்ப சீரியஸ் கதை என்று சொன்ன பிறகு நடிக்க ஆர்வத்துடன் கால்ஷீட் கொடுத்தார்.

ஒரு தந்தைக்கும், மகளுக்குமான பாசப்பிணைப்பை பற்றி சொல்லும் இப்படத்தைப் பார்த்த சென்சார் குழு, திரையில் இக்கதையை நான் சரியான முறையில் கையாண்டுள்ளதாகப் பாராட்டினர்’ என்றார்.

Tags : Yogi Babu ,
× RELATED அண்ணன் உடையான்… தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு