×

கேரளாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக ஜிகா வைரஸ் பரவல் : இதுவரை 28 பேருக்கு தொற்று உறுதி; உச்சகட்ட பீதியில் மக்கள்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக ஜிகா வைரசும் பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கேரளாவில் ஜிகா வைரஸ் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. நேற்று வரை 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தை சேர்ந்த மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரம் ஆனையரா பகுதியை சேர்ந்த 35 மற்றும் 29 வயதான 2 பெண்கள், குன்னுக்குழி பகுதியை சேர்ந்த 38 வயதான பெண், பட்டம் பகுதியை சேர்ந்த 33 வயது ஆண், கிழக்கேகோட்டை பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. …

The post கேரளாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக ஜிகா வைரஸ் பரவல் : இதுவரை 28 பேருக்கு தொற்று உறுதி; உச்சகட்ட பீதியில் மக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Corona ,Kerala ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...