×

ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ

சென்னை : சமீபத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமான நிலையில் அவரது திருமண வீடியோ ‘ஹாட்ஸ்டாரில்’ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானிக்கு, கடந்த ஓரிரு வருடமாக படங்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா அறிவித்தார். இப்போது காந்தாரி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவை போல் தனது திருமண விழாக்களையும் ஓடிடி நிறுவனத்துக்கு ஹன்சிகா விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரூ.15 கோடிக்கு தனது திருமண விழா நிகழ்ச்சிகளை ஹன்சிகா விற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Tags : Hansika ,OTT ,
× RELATED கலகல அதிரடி ‘உப்பு புளி காரம்’ சீரிஸ்… மே 30 முதல் ஓடிடியில்!