×

பிரபாசை திருமணம் செய்ய ரெடி: கீர்த்தி சனோன் அதிரடி அனுஷ்கா அதிர்ச்சி

மும்பை: பிரபாசை திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் கூறியுள்ளார். வருண் தவன், கீர்த்தி சனோன் நடித்த பேடியா இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கீர்த்தியின் வாழ்வில் உயரமான இளவரசர் ஒருவர் வந்திருக்கிறார் என வருண் தவன் கூறினார். இதையடுத்து அந்த நபர் பிரபாஸ் தான் என மீடியாவினர் கணித்தனர். பிரபாசுடன் ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சனோனிடம் நிருபர்கள் கேட்கும்போது, பிரபாசை காதலிக்கிறீர்களா என கேட்டனர். அதற்கு கீர்த்தி, காதலா நான் அவரை திருமணம் செய்யவும் ரெடி என கூறினார். இந்த பதில் அவர் தமாஷாக சொன்னது என சிலரும் சீரியஸாக சொன்னதும் வேறு சிலரும் கூறி வருகிறார்கள். இதையெல்லாம் பற்றி தெரிந்து அனுஷ்கா அதிர்ச்சி அடைந்துள்ளாராம். பிரபாசுக்கு தற்போது 46 வயதாகிறது. அனுஷ்காவுக்கு 42 வயது. அவர் இதுவரை திருமணம் செய்யாதது, பிரபாசுக்காகக்தான் என கூறப்படுகிறது. பிரபாசுக்காக காத்திருக்கும் அனுஷ்கா தனக்கு தோஷம் இருப்பதாலேயே திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சனோன் சொன்னது பற்றி அனுஷ்காவிடம் கேட்க முயன்றபோது, அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தார்.

Tags : Keerthy Sanon ,Anushka ,
× RELATED நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச்