×

தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்

எஸ்ஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்கும் படத்தை குரு சரவணன் இயக்குகிறார். இதில் சதீஷ், ஆதி சாய்குமார் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய குரு சரவணன், பிறகு கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் அவரை கதையின் நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தை இயக்கினார். டப்பிங் கலைஞரும், நடிகருமான சாய்குமாரின் மகனும், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவருமான ஆதி சாய்குமார் தமிழில் அறிமுகமாகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைக்கிறார். துரைராஜ் அரங்கம் அமைக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Tags : Aadhi Saikumar ,G. Suresh ,SGS Productions ,Guru Saravanan ,Sathish ,K.S. Ravikumar ,Saikumar ,Manoj Paramahamsa ,Ghibran Vaibodha ,Durairaj ,
× RELATED ‘அவதார்’ 4ம் பாகம் உருவாகுமா?