×

மனைவி சாக்‌ஷியின் கதையை தமிழில் தயாரிக்கும் டோனி

சென்னை: கிரிக்கெட் வீரர் டோனி, தமிழில் படம் தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். டோனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் டு ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது டோனி தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். அந்த படத்தின் கதையை டோனியின் மனைவி சாக்‌ஷி எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3டி வடிவில் எடுக்க இருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தோனி தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இது குறித்து டோனியின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், எங்களை குறிப்பிட்ட மொழி சார்ந்த நிறுவனம் என அடையாளப்படுத்த விருப்பமில்லை. நம்முடைய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள இந்திய பார்வையாளர்களுக்கு அர்த்தம் உள்ள கதைகளை கொடுக்கும் நோக்கில் இருக்கிறோம். இந்த நிறுவனம் அறிவியல் புனைவு, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் வகையான திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags : Tony ,Sakshi ,
× RELATED மல்யுத்த வீராங்கனைகள் பாலியல்...