×

நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு…!

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு நாளை சமர்ப்பிக்கிறது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஜூன் 10-ம் தேதி நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், ‘நீட்’ தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு  செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ளது….

The post நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு…! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. ,Stalin A. K.K. ,Chennai ,Rajan Committee ,Minister ,Stalin A. K.K. Rajan Group ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...