×

பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் பம்பா பாக்யா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது (49). சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பம்பா பாக்யாவுக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த நேரத்தில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இசை அமைப்பாளர் தேவாவின் இசை கச்சேரிகளில் பாடிவந்த பம்பா பாக்யாவை ஏ.ஆர்.ரகுமான் சினிமா பாடகராக அறிமுகப்படுத்தினார். ‘ராவணன்’ படத்தில் ‘கெடாகறி...’ என்ற பாடலை பாட வைத்தார். அதன்பிறகு ரஜினி நடித்த ‘2.0’ படத்தில் ‘புள்ளினங்காள்...’, ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்ற ‘சிம்டங்காரன்..., ‘பிகில்’ படத்தில் ‘காலமே...’ உள்பட பல படங்களில் பாடி உள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் பாடி உள்ளார்.

Tags : Bamba Bhagya ,
× RELATED நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்