விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சி நீக்கம்

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ள ‘கோப்ரா’ படம், கடந்த 31ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மீனாட்சி கோவிந்தராஜன், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, ஜான் விஜய், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்படம் தியேட்டர்களில் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்தது. இதனால், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர், ‘கோப்ரா’ படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ கூறியுள்ளது. நீளம் குறைக்கப்பட்டுள்ள ‘கோப்ரா’ படம், நேற்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நீளம் குறைக்கப்பட்ட படம் தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் இருப்பதாக, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: