×

வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்தது: தணிப்பாறை அருகே போக்குவரத்து துண்டிப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லிங்கம் கோயில் ஓடை பாலம் உடைந்ததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் வத்திராயிருப்பு-தாணிப்பாறை இடையே லிங்கம் கோயில் ஓடையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதனால் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்தது: தணிப்பாறை அருகே போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanipara ,Vathirayiru ,Chaturagiri ,Lingam Koil ,Dinakaran ,
× RELATED மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு