×

கிராமி விருது பெற்ற ஹாலிவுட் பாடகர் மரணம்

நியூயார்க்: கிராமி விருது பெற்ற ஹாலிவுட் பாடகர் லாமண்ட் டோசியர் உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட்டில் வசித்த பாடகரும், கவிஞருமான லாமண்ட் டோசியர் (81), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் காலமானார். இவரது மனைவி பார்பரா உல்மன் கடந்தாண்டு இறந்தார். அவரது மகன்கள் பாடகர் பியூ டோசியர் மற்றும் இசையமைப்பாளர் பாரிஸ் ரே டோசியர் ஆகியோர் ஆவர். லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த 2009ல் நடந்த 51வது ஆண்டு கிராமி விருதுகளை லாமண்ட் டோசியர் பெற்றார். ‘‘ஸ்டாப்! இன் தி நேம் ஆஃப் லவ்”, ‘‘பேபி லவ்”, ‘‘டூ ஹார்ட்ஸ்” போன்ற படங்களின் வெற்றிப் பாடல்களை எழுதிய கவிஞர் மற்றும் பாடகரான லாமண்ட் டோசியரின் மறைவுக்கு, ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Hollywood ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...