×

ஹைதி அதிபரை கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை

போர்ட்டோ பிரின்ஸ்:  ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெலை சுட்டுக் கொன்ற 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரீபியன் நாடான ஹைதியில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருவதால் அதிபர் ஜோவினெல் மொய்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் குடியிருப்பில் தங்கி இருந்த அதிபர் செவ்வாயன்று இரவு அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அதிபரின் மனைவி மார்டினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மொய்சி கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும். அடையாளம் தெரியாத நபர்களால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்ட 3 போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதிபர் கொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் ராணுவம் மற்றும் போலீசார் சூழலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக இடைக்கால பிரதமர் ஜோசப் கூறுகையில், ‘‘வெளிநாட்டை  சேர்ந்த கூலிப்படையினரால் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மறைந்த அதிபர் மொய்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்,” என்றார்….

The post ஹைதி அதிபரை கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Haiti ,of Porto ,President Jovinel ,
× RELATED வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில்...