×

மேகதாது அணை கட்டும் முயற்சியை சட்டப்படி தடுப்போம்: துரைமுருகன் அறிக்கை

சென்னை: கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மேகதாது பிரச்சனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூலை 4ம் தேதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதிய பதில் கடிதத்தில், தமிழ்நாடு விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவிரி நீரையே நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதை செயல்படுத்தக் கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post மேகதாது அணை கட்டும் முயற்சியை சட்டப்படி தடுப்போம்: துரைமுருகன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Cloudadu Dam ,Chennai ,Government of Karnataka ,Cloudadu, Tamil Nadu ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...