×

குழந்தை கடத்தல் வாலிபர் சிக்கினார்

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(60). இவருக்கு அம்சா, துளசி என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்களிடையே, குடும்பம் நடத்துவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அம்சாவின் மகள் கலைவாணி. இவர் இரண்டு குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். துளசியின் மகன் சதீஷ்குமாருக்கும், கலைவாணிக்கும் கடந்த 3 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில், கலைவாணிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கலைவாணி சதீஷ்குமாரை பார்ப்பதை தவிர்த்து வந்தார். இதையறிந்த சதீஷ்குமார் கலைவாணியை கண்டித்தார். ஆனால், கலைவாணி வேறொருவருடான கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால், ஆத்திரமடைந்த  சதீஷ்குமார் கலைவாணியின் 3 வயது பெண் குழந்தையை  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றார்.புகாரின்பேரில்  ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சதீஷ்குமார் குழந்தையுடன் திருப்பதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது செல்போன் சிக்னல் மூலம், சதீஷ்குமாரை சுற்றி வளைத்து கைதுசெய்து, பத்திரமாக குழந்தையை மீட்டனர்….

The post குழந்தை கடத்தல் வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Srinivasan ,Mukappher ,Amsa ,Tulsi ,Dinakaran ,
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...