×

மாமனிதனை பாராட்டிய ரஜினி

சீனு ராமசாமி இயக்கி உள்ள படம் மாமனிதன். விஜய்சேதுபதி, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசை அமைத்து தயாரித்துள்ளார். இந்த படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் வெளிவரவில்லை. தற்போது வெளிவருகிறது. ஆனால் இந்த படத்தை ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதமே பார்த்து பாராட்டி உள்ளார்.

அந்த தகவலை சீனு ராமசாமி இப்போது வெளியிட்டிருக்கிறார். "மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள்(ரஜினி) பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, விற்பனையும் ஆகிவிட்டது. நன்றி சார். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...