×

இல்லாத காதலனுக்காக குழந்தையை கொன்ற சம்பவம் ‘ஒன்டே மிரர்’ என்ற பெயரில் படமாகிறது: தமிழ், மலையாளத்தில் தயாரிக்க முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே இல்லாத பேஸ்புக் காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவத்தை தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் சினிமா படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் கல்லுவாதிக்கல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (30). அவரது மனைவி ரேஷ்மா (26). அவரது உறவினர்கள் ஆர்யா (24). கிரிஷ்மா (23). 2 பேரும் கடந்த ஒன்றரை வருடமாக அருண் என்ற பெயரில் பேஸ்புக்கில் ரேஷ்மாவை ஏமாற்றி சாட்டிங் செய்து வந்து உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய ரேஷ்மா காதலனுக்காக தனது 2வது குழந்தையை காட்டில் வீசி கொன்றார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆர்யாவும், கிரிஷ்மாவும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ரேஷ்மாவின் கணவர் விஷ்ணு கூறியதாவது: நானும், ரேஷ்மாவும் 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்தின் போது ரேஷ்மாவுக்கு 19 வயது தான் இருக்கும். ஆரம்பத்தில் எங்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை. பேஸ்புக்கில் நீண்டநேரம் சாட்டிங் செய்ய தொடங்கிய போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு தெரியாமல் வர்க்கலாவுக்கு சென்று உள்ளார். எனது நண்பர் ஒருவர் ரேஷ்மாவை வர்க்கலாவில் பார்த்ததாக கூறினார். வீட்டிற்கு வந்ததும் இது குறித்து கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தான் பேஸ்புக் மூலம் அருண் என்ற காதலன் இருப்பதாகவும், அவரை பார்க்க வர்க்கலா சென்றதாகவும் கூறினார். உடனே நான் கோபத்தில் போனை வாங்கி சிம்கார்டை ஒடித்து போட்டு விட்டேன். அதன் பிறகு போனை அவளிடம் கொடுக்க வில்ைல. துபாய்க்கு வேலைக்கு செல்லும் சமயத்தில் தான் போனை கொடுத்தேன். அதன்பிறகு எனது அண்ணி ஆர்யாவின் செல்போன் சிம்கார்டை வாங்கி பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார். காதலனுடன் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தால் குழந்தையை கொல்லாமல் என்னிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.இல்லாத காதலனுக்காக பிறந்த குழந்தையை கொன்ற தாய் குறித்த உண்மை சம்பவத்தை மலையாளம், தமிழில் சினிமாவாக தயாரிக்க தீர்மானித்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த சந்தோஷ் கைமள் எழுதும் திரைக்கதையை புதுமுகமான ஷானு காக்கூர் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘‘ஒன்டே மிரர்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளை சீரழிக்கும் சமூக இணைய தளங்கள், போலியான சமூக இணைய தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து இந்த படத்தில் விவரிக்கப்படுகிறது.இது ஒரு குடும்ப சஸ்பெண்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று இயக்குனர் ஷானு கூறினார். மேலும் அவர் கூறிகையில், தமிழ் மற்றும் மலையாளம் என்று 2 மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் இருமொழிகளையும் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்திற்கான கதாபாத்திரங்கள் ேதர்வு விரைவில் தொடங்கும் என்று கூறினார்…

The post இல்லாத காதலனுக்காக குழந்தையை கொன்ற சம்பவம் ‘ஒன்டே மிரர்’ என்ற பெயரில் படமாகிறது: தமிழ், மலையாளத்தில் தயாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Malayalam ,Thiruvananthapuram ,Pacchilam ,Facebook ,Kollam, Kerala ,Tamil, Malayalam ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு