×

விஞ்ஞானி ஆகிறார் ஹன்சிகா

தமிழில் வெளியான ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங், பிஸ்கோத், தள்ளிப் போகாதே ஆகிய படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இதில் சில படங்களை அவர் தயாரித்துள்ளார். தற்போது அவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள ரீமேக், சிவாவுடன் பிரியா ஆனந்த், யோகி பாபு நடித்த காசேதான் கடவுளடா ரீமேக் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில், அடுத்து ஹன்சிகா நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.கண்ணன் கூறுகையில், ‘காமெடி ஹாரர் கதை கொண்ட இதில், நேத்ரா என்ற இளம் அறிவியல் விஞ்ஞானியாக ஹன்சிகா நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் சுபா வெங்கட் வசனம் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது’ என்றார்.

Tags : Hansika ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி