×

சீன மொழியில் வெளியாகும் கனா

சிவகார்த்திகேயனின்  முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும்  நடித்திருந்தனர்.  2018ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையும்   பல விருதுகளையும் வென்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18ம் தேதி  வெளியாகிறது. சீன மொழி சப் டைட்டிலுடனும்,  நேரடி சீன மொழி யிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.  முன்னதாகவே சீனாவில் வெளியாகவேண்டிய  இப்படம் கோவிட் காரணங்களால்  இப்போது வெளியாகிறது.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி