×

20 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் வழங்கினார்

ஆலந்தூர்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் மற்றும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா, ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 20 பெண்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் போன்றவற்றை வழங்கினார். மேலும், 11 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019ம் ஆண்டு மனு கொடுத்தவர்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம், இலவச தையல் இயந்திரம் நாங்கள் வழங்குகிறோம். சிதிலமடைந்த பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை படிப்படியாக இடித்துவிட்டு அதே இடத்தில் 420 சதுர அடியில் வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே 217 சதுர அடியில் இருந்த வீட்டை 420 சதுர அடியில் கட்டித் தரப்படும். மிகவும் மோசமாக உள்ள கட்டிடங்கள் முதலில்  கட்டித்தரப்படும்,’ என்றார். …

The post 20 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Department of Social Welfare and Women ,Rights ,Dhali ,Satyavani Pearl Mammyar ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்