×

தங்கை கணவர் வீட்டில் அக்கா அடித்து கொலை?

பெரம்பூர்: சென்னை பொன்னியம்மன்மேடு வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மனைவி மற்றும் மஞ்சு (20), சரண்யா (19) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், சரண்யாவுக்கும், கொளத்தூர் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சரண்யா சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு சென்ற கார்த்திக், சரண்யா என்னுடன் குடும்பம் நடத்த வரவேண்டாம். என்னுடைய வீட்டில் இருக்கும் அவளது துணிமணிகளை வந்து எடுத்துச் செல், என மஞ்சுவிடம் கூறியுள்ளார். அதன்படி கார்த்திக் வீட்டிற்கு சென்ற மஞ்சு, தங்கையின் துணிமணி, பொருட்களை எடுத்தபோது மஞ்சுவுக்கும், கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக், மஞ்சுவை சரமாரி தாக்கிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மஞ்சு மின்விசிறியில் தூக்கில்  தொங்குவது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post தங்கை கணவர் வீட்டில் அக்கா அடித்து கொலை? appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajendran ,Veerabandian Street, Ponnyammanmedu, Chennai ,Manju ,Saranya ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி