×

ஓளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுக..! ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஒளிப்பதிவு வரைவு மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஒரு படத்திற்கு வழங்கிய சான்றை பார்வையாளர்கள் புகார் அளித்தால் திரும்பப் பெற முடியும். சென்சார் சான்று அளிக்கும் குழுவுக்கே பிரச்னை இல்லையெனினும் சான்றை திரும்பப் பெற இந்த சட்டம் வழிவகுக்கும். அதனால், மத்திய அரசு கொண்துவந்துள்ள இந்த மசோதாவுக்கு திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் சென்சார் நடைமுறைக்கு மேல் கூடுதல் சுமையை இச்சட்டம் உருவாக்குவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழ் திரையுலகினரும் இதற்கு எதிராக குரலெழுப்பி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்….

The post ஓளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுக..! ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Ravi Shankar Prasad ,Chennai ,M. K. Stalin ,Union Minister Ravi Shankar Prasad ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...