×

மிரட்டும் மகான் டீசர்

விக்ரமின் 60வது திரைபடமான  மகானில் அவரது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, லலித்குமார் தயாரிக்கும் படம். இதில் விக்ரமும், துருவ் விக்ரமும் தந்தை மகனாக நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இப்போது படத்தின் டீசர் வெளியாகி அது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. டீசரில்  தன் மகன் காந்தி மகான் மது ஒழிப்பில் ஈடுபட்டு நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தந்தை நரேன் கேட்கிறார். ஆனால அந்த மகன் சாராய சாம்ராஜ்யத்தின் தாதாவாகிறார். அவரது மகன் என்ன செய்கிறார் என்பதோடு டீசர் முடிகிறது. போதை உலகில் சிண்டிகேட் தாதாயிசத்தை மையமாக வைத்து படம் உருவாகி இருப்பது தெரிகிறது.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி