×

பிறந்த நாளில் காதலை உறுதி செய்த பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். வரும்போதே எனக்கொரு காதலர் இருக்கிறார். அவரது பெயர் ராஜ் வேல் என்று அறிவித்தார். அவருடன் இருக்கும் படங்களையும் வெளியிட்டார். ஆனால் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்ததும் பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

இந்த நிலையில் காதலன் பிறந்த நாளில் அவரை பற்றி வாழ்த்து பதிவிட்டு மீண்டும் தனது காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ், நீங்கள் ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து  அற்புதமான மனிதராக பரிணமித்ததைக் காண நான் ஒரு அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு ஏராளமான புன்னகை, சாகசங்கள், நட்பு, அன்பு, ஆசீர்வாதங்கள், அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி என்றென்றும். என கூறியுள்ளார். இதன் மூலம் தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Tags : Priya Bhavani Shankar ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...