×

சியான் விக்ரம் நடிக்கும் மகானின் கதை

விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி 10ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடி தளத்தின் விதிமுறைபடி படத்தின் கதை சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அது வருமாறு: மகான், தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக 'மகான்' உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது 'மகான்' படத்தின் திரைக்கதை.

Tags : Mahan ,Sian Vikram ,
× RELATED டிரைவர் மீது தாக்குதல்