கடைசி படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள புனித் ராஜ்குமார்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான படம் ‘யுவரத்னா’. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில்  வெளியாகி உள்ளது.

புனித் ராஜ்குமார் மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக நடித்துள்ள படம் ஜேம்ஸ். இதனை சேத்தன் குமார் இயக்கியுள்ளார்.இதில் பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் முதல்முறையாக புனித் ராஜ்குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இதை முன்னிட்டு அவரை பெருமைபடுத்தும் விதமாக குடியரசு தினத்தன்று அவரின் ராணுவ வீரர் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories: