×

பிலிப்பைன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து விபத்து: 15 பேர் உயிருடன் மீட்பு

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்சில் 85-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும் போது  சி-130 ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறியதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற பிரார்த்தனையுடன் முழு வீச்சில் மீட்பு பணியில், மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அடிப்படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாக  உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களின் நிலை என்ன? என்ன என்பது பற்றி தற்போது வரை தெளிவான எந்த தகவலும் கிடைக்கவில்லை….

The post பிலிப்பைன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து விபத்து: 15 பேர் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Jolo, Philippines ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!