×

ரஜினி கேங் விமர்சனம்…

காதலர்கள் ரஜினி கிஷன், த்விகா இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். அப்போது அவர்கள் முனீஷ்காந்தின் காரில் லிப்ட் கேட்கின்றனர். அதே காரில் திருடன் கல்கிக்கும் லிப்ட் கொடுக்கின்றனர். நால்வரும் காரில் பயணித்து ஏற்காடு மலைப்பகுதிக்கு செல்கின்றனர். கனகா என்ற ராசியான அந்த காரை பறிகொடுத்த அமைச்சர் மனோகர், உடனே அதை கண்டுபிடிக்க போலீசாரை முடுக்கிவிடுகிறார்.

இந்நிலையில் ரஜினி கிஷன், த்விகா திருமணம் நடக்கிறது. முதலிரவில் த்விகாவின் உடலில் வேறொரு பெண்ணின் ஆவி புகுந்து அட்டகாசம் செய்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. காமெடி, சென்டிமெண்ட், லவ், ஆக்‌ஷன் என்று, அனைத்து ஏரியாவிலும் ரஜினி கிஷன் புகுந்து விளையாடி இருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து நடித்துள்ள த்விகா, தனது உடலில் இன்னொரு பெண்ணின் ஆவி புகுந்த பிறகு செய்யும் அட்டகாசங்கள் மிரட்டலாக இருக்கிறது.

முனீஷ்காந்த், கல்கி, கூல் சுரேஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரின் காமெடி ஓ.கே ரகம். கதைக்கேற்ப ஒளிப்பதிவு செய்துள்ள என்.எஸ்.சதீஷ் குமார், இசை அமைத்துள்ள எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கது. காமெடி பேய் கதையை லாஜிக் பற்றி கவலைப்படாமல் இயக்கியுள்ள எம்.ரமேஷ் பாரதி, காட்சிகளை சற்று மாற்றி யோசித்திருக்கலாம்.

Tags : Rajini Kishan ,Dvika ,Munishkant ,Kalki ,Yardadu Highlands ,Minister ,Manohar ,Kanaka ,Tvika ,
× RELATED ஏஐ மூலம் ஆபாசம் ராஷ்மிகா ஆவேசம்