×

லீடர் படத்தின் டீசர் வெளியீடு

சென்னை: லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள ‘லீடர்’ என்ற பான் இந்தியா படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்க, லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, லால், பிரபாகர், அம்ரிதா அய்யர், விடிவி கணேஷ் நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி அளிக்க, பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.

ஜார்ஜியா, தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் குறித்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கூறுகையில், ‘அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிகரமான பயணம்தான் ‘லீடர்’. தனது மகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு தந்தையைச் சுற்றி கதை நடக்கிறது. இன்றைய ரசிகர்களை மனதில் கொண்டு, உணர்ச்சிப்பூர்வமான படமாக உருவாக்கியுள்ளோம். வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது’ என்றார்.

Tags : India ,Legend Saravanan ,R.S.Durai Senthilkumar ,Legend Saravana Stores Productions ,Payal Rajput ,Sham ,Andrea ,Lal ,Prabhakar ,Amrita Iyer ,VTV Ganesh ,Ghibran Vaibodha ,S. Venkatesh ,Mahesh Mathew ,Pradeep E. Raghav ,Georgia ,Thoothukudi ,Jaipur ,Ooty ,Chennai ,
× RELATED கொரியாவில் பிரியங்கா சந்தித்த சவால்