×

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் டெக்ஸ்லா

சென்னை: கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதி இயக்கும் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. இதில் ஜெய், சூரஜ் வெஞ்சரமூடு, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ஜார்ஜ் மரியன் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, தீபக் ரவி இணை தயாரிப்பு செய்கிறார். தொடக்க விழாவில் சீமான், லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சவுத்ரி, அனிருத், பாலா, ஆர்.வி.உதயகுமார், சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம்.தமிழ்குமரன், டி.சிவா, சுப்பு பஞ்சு, சாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அப்போது பாலா பேசுகையில், ‘ஒரே நேரத்தில் கண்ணன் ரவி 16 படங்கள் தயாரித்து, பல குடும்பங்களை வாழ வைக்கிறார்’ என்றார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, ‘என்மீதும், குழுவினர் மீதும் அதிக நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு நன்றி’ என்றார். ஜெய் பேசுகையில், ‘இப்படத்துக்கு கடினமாக உழைப்பேன். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். தயாரிப்பாளரின் எண்ணத்தை பார்த்தால், வாழ்க்கை சிறியது போல் தோன்றுகிறது. இந்த படம் எல்லா அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படமாக இருக்கும்’ என்றார்.

Tags : Jai ,Aishwarya Rajinikanth ,Chennai ,Kannan Ravi ,Kannan Ravi Group ,Suraj Venjaramoodu ,Anandaraj ,G.M. Sundar ,George Marian ,Yuvan Shankar Raja ,Deepak Ravi ,Seeman ,Latha Rajinikanth ,R.P. Chowdhury ,Anirudh ,Bala ,R.V. Udayakumar ,Sujatha Vijayakumar ,G.K.M. Tamilkumaran ,D. Siva ,Subbu Panchu ,Sandy ,
× RELATED கொரியாவில் பிரியங்கா சந்தித்த சவால்