×

ஹாரர் திரில்லரில் ஜோவிதா

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இன்னும் பெயர் சூட்டவில்லை. படம் குறித்து இயக்குனர் கே.எஸ்.கிஷான் கூறுகையில், ‘இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதில் ஜோவிதா, சோனியா அகர்வால், ‘அயலி’ மதன், ஆதர்ஷ், லிவிங்ஸ்டன், விஜே விஜய், கிருத்திகா நடிக்கின்றனர். விக்னேஷ் ராஜா இசை அமைக்க, சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்கிறார்.

பயோவன் கிரியேஷனிசம் சார்பில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்.லோகேஸ்வரன் தயாரிக்கிறார். திருசெல்வம் எடிட்டிங் செய்கிறார். அடுத்த மாதம் கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து முடிகிறது’ என்றார்.

Tags : JOVITA ,Livingston ,Jovitha Livingston ,Chennai ,K. S. Kishan ,Sonia Agarwal ,Ayali' Madan ,Adarsh ,Vijay Vijay ,Kirutika ,Vignesh Raja ,Sangeet Manikopal ,Biovan Creationism ,N. LOKESWARAN ,Trushelvam ,
× RELATED தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்