×

கடல் கன்னியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா

போக்கஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கடல் கன்னியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. அவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே துப்பாக்கிமுனை என்ற படத்தை இயக்கி உள்ளார். பால சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட்ட போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர்  மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

Tags : Andrea ,
× RELATED மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி