×

சிம்பு ஜோடியான தெலுங்கு நடிகை சித்தி இதானி.!

கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற தகவலை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. ஜம்பலகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்த, சித்தி இதானி தான் சிம்பு ஜோடியாக நடிக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே, வெந்து தணிந்தது காடு படத்திலும் நாயகி கதாபாத்திரம் வலுவானவதாகவும், அழுத்தமிகுந்த பாத்திரமாகவும் அமைந்துள்ளது. இதன்  படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடக்கிறது.

Tags : Siddhi Ithani ,Simbu ,
× RELATED 750 நாள் கொண்டாடிய விடிவி