- சென்னை
- சூரியதேவி பாபு
- சினிமா டூர் பொழுதுபோக்கு
- பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட்
- நக்கீரன்
- ஆனந்த்
- செந்தில்
- சந்தோஷ் பிரதாப்
- அப்புச்சி கிராமம்
- பிரவீன்
- சூர்யா தேவி
சென்னை: சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன், ஆனந்த் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தினை நகைச்சுவை நடிகர் செந்தில் கிளாப் அடித்து துவங்கி வைத்தார். இத்திரைப்படம் இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாதேவியும் நடிக்கவுள்ளார். இன்னொருவர் விரைவில் தேர்வு செய்யபடவுள்ளார். இத்திரைப்படம் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவு – ஸ்ரீவேனுவாசன். இசைய – சாம்சன்.

