×

சிவகார்த்திகேயன் ஹீரோ ஆவதை தடுத்த இயக்குனர்

பலூன்’ என்ற படத்தின் இயக்குனர் கே.எஸ்.சினீஷ் தயாரிப்பாளராகி, தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது அவர் தயாரிக்கும் 2 படங்களுக்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது. அர்ஜூன் தாஸ், தேஜு அஸ்வினி நடிக்கும் படத்துக்கு ‘சூப்பர் ஹீரோ’ என்றும், ஃபைனலி பாரத் நடிக்கும் படத்துக்கு ‘நிஞ்சா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘அர்ஜூன் தாஸுக்கும் மற்றும் ‘நிஞ்சா’ டீமுக்கும் எனது வாழ்த்துகள். இக்கதைகளின் ஐடியா எனக்கு தெரியும். அது மிகவும் சுவாரஸ்யமானது. ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது எங்களுக்கு ஆபீஸ் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்று அப்போது யாரும் உறுதி செய்யப்படவில்லை. மெரீனா பீச்சில் அமர்ந்து கதை விவாதம் நடத்துவோம்.

நெல்சன் திலீப்குமார் சொல்லும் விஷயங்களை நான் எழுதுவேன். ஆபீஸ் முடிவான பிறகு அருண்ராஜா காமராஜ் வந்து சேர்ந்தார். பிறகு கே.எஸ்.சினீஷ் வந்தார். அவர் நெல்சன் திலீப்குமாரின் பிரெண்ட் என்று எனக்கு தெரியும். அப்போது அவர் என்னிடம், ‘நீங்கள் என்னவாக திட்டம்?’ என்று கேட்டார். அப்போது எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி, ஒரு காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருந்தேன். கே.எஸ்.சினீஷை வம்புக்கு இழுப்போம் என்று, ‘நான் ஹீரோவாக ஆசை’ என்று சொன்னேன். உடனே அவர், ‘எதுக்கு உங்களுக்கு இந்த ஆசை? டைமிங் நன்றாக வருகிறது. சைடில் காமெடி ரோலில் நடிக்க ஆசைப்பட்டால் ஓகே’ என்று சொன்னார். உடனே நான், ‘ஏன்… நாங்களெல்லாம் ஹீரோவாக நடிக்கக்கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிறீர்கள்.

ஹீரோ ஆசை உங்களுக்கு வேண்டாம்’ என்று தடுத்தார். நான் ஹீரோவான பிறகு அவருக்கு இந்த விஷயம் நினைவுக்கு வந்ததால், உடனே என்னிடம் வந்த அவர், ‘அன்றைக்கு நான் பேசியதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்றார். எனக்கு அவர் மீது கோபம் கிடையாது என்று சொன்ன பிறகே நிம்மதி அடைந்தார்’ என்றார்.

Tags : Sivakarthikeyan ,K. S. ,Chennai ,Arjun Das ,Teju Aswini ,Ninja ,Finali Bharat ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா