×

முதல்வர் மகன் என்ற அடையாளத்தை பயன்படுத்தாத உதயநிதி: சேலத்தில் நடிகர் விஷால் பேட்டி

சேலம்: சேலத்தில் லத்தி திரைப்பட அறிமுக விழா மற்றும் விஷால் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல உயிர்களின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும். உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். சூதாட்டம் போன்ற தவறான வழிகளில் வரும் பணம் எப்போதும் நிலைக்காது என்பதை நாம் உணர வேண்டும். சூதாட்ட விளம்பரத்தில் என்னிடம் நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டேன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பன் உதயா, இதுபோன்ற பதவிக்கு வர வேண்டும் என்ற எனது 9 ஆண்டு கால கனவு நனவாகி உள்ளது. மு.க.ஸ்டாலின் மகன் என்ற அடையாளத்தை ஒரு போதும் பயன்படுத்தாமல், தனக்கென தனி அடையாளத்துடன் வலம் வந்தவர் உதயநிதி. அவருக்கு தகுதி வாய்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக எழுந்துள்ள பேச்சு. ஆனால் தனக்கு ஒதுக்கிய துறையில் உதயநிதி திறம்பட செயலாற்றி, அதை மாற்றிக்காட்டி சாதனைகளை படைப்பார். அப்போது இதுபோன்ற பேச்சுக்கள் காணாமல் போகும். எனது லத்தி படத்திற்காக விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளில் இருந்தும் தலா ஒரு ரூபாய் என்ற அளவில் விவசாயிகளுக்கு வழங்குவேன். ஏழை குழந்தைகளின் கல்விக்காக என்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்வேன். அதற்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்….

The post முதல்வர் மகன் என்ற அடையாளத்தை பயன்படுத்தாத உதயநிதி: சேலத்தில் நடிகர் விஷால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Chief Minister ,Vishal ,Salem ,Lathi ,Udhayanidhi ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...