×

இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பால் சன்னி லியோன் ஆடிய பாடல் வரி நீக்கம்

போபால்: இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் நடிகை சன்னி லியோன் ஆடிய குத்தாட்ட பாடலின் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படுவதாக பாடலாசிரியர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ‘மதுபன்’ இசை ஆல்பம் ஒன்றுக்கு ஆடிய குத்தாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பாடலில் வரும் வரிகள் மற்றும் ஆபாச நடனம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, ‘சன்னி லியோன், ஷரிப், தோஷி ஆகியோர் சர்ச்சைக்குரிய பாடலை யூடியூப்பில் இருந்து நீக்காவிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். அதையடுத்து அந்த பாடலின் பாடலாசிரியர் ஷெரீப், சர்ச்சைக்குரிய பாடலின் வரிகளை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த மூன்று நாட்களில் பழைய பாடலுக்கு பதிலாக புதிய பாடல் வெளியாகும் என்று ஆல்பம் தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Sunny Leone ,
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்