×

ஓடிடியில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம்: யு/ஏ சான்றிதழ்

விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம்  U/A சான்றுடன் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 2019-ல் ரஜினியின் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ் 5 குறும்படங்களை கொண்ட புத்தம் புது காலை, தனுஷின் ஜகமே தந்திரம், 9 குறும்படங்களை கொண்ட நவரசா உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் தோல்வியையே சந்தித்திருந்தன.

இதையடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை கொண்டு மகான் என்னும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். மகான் படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். ஆதித்ய வர்மா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு தனது இரண்டாவது படமாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகானின் துருவ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகளையும் விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் முடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார். துருவின் குரலில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல் குறித்து ஆவல் மிகுந்துள்ளது. நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துருவ் நடித்துள்ளார். நடிகர் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் மகான் படத்தின் டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் முடித்த உற்சாகத்தில் தந்தையும், மகனும் உற்சாகமாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம்  U/A சான்றுடன் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படம் தான் ஓடிடியில் வெளியாகவுள்ள விக்ரமின் முதல் படமாகும்.

Tags : Vikram ,Dhruv Vikram ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்