×

நெருங்க மறுக்கும் மெஹ்ரின்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர், மெஹ்ரின் பிர்சாடா. தற்போது அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்காததால், மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் வெங்கடேஷ், வருண் தேஜ் இணைந்து நடிக்கும் ‘எப் 3’ என்ற படத்தில் நடித்துள்ளார். சில படங்களில் பிகினி உடையில் தோன்றியுள்ள மெஹ்ரின், தெலுங்கில் தன்னை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களுக்கு திடீர் கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது, சில இயக்குனர்கள் தன்னை அணுகி கதை சொன்னபோது, முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம். இதற்கு மறுப்பு தெரிவித்த மெஹ்ரின், ‘இதுபோன்ற காட்சிகளில் நடித்து, என்னை ஒரு தைரியமான நடிகை என்று முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை’ என்றாராம்.

Tags : Mehreen ,
× RELATED பாலியல் வல்லுணர்வு காட்சியில் நடித்த மெஹ்ரினுக்கு கடும் எதிர்ப்பு