×

சட்டத்தின் மூலம் தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோடிகளை செலவு செய்ய தயாராக உள்ளது: ஆய்வுக்குழு தலைவர் தகவல்

சென்னை: சட்டத்தின் மூலம் தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நோக்கில் அதன் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அழைக்காமல் காலதாமதம் செய்ததால் மசோதா காலாவதியானது. இந்நிலையில், சட்டத்தின் மூலமாக தடையை கொண்டுவராமல் இருப்பதற்கு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு அமைத்த ஆன்லைன் சூதாட்ட ஆய்வு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஒரு வார இதழில் நீதிபதி சந்துரு எழுதியுள்ள கட்டுரையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மூலம் ஒன்றிய அரசு கோடிக்கணக்கில் வருமான வரி ஈட்டுவதாகவும், மாநில அரசுகளும் 28% வரி வசூலித்துக்கொள்ள ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை போடா மறுப்பதற்கு பின்னணியில் இருப்பது யார் என தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த ஆய்வு காலத்தில் தனது தலைமையிலான குழுவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதி சந்துரு தனது கட்டுரையில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு 28 பேர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. …

The post சட்டத்தின் மூலம் தடையை கொண்டுவராமல் இருக்க ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோடிகளை செலவு செய்ய தயாராக உள்ளது: ஆய்வுக்குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...