×

ஜாக்கிசான், அர்னால்ட் இணைந்த படம்

ஹாலிவுட்டின் இரு துருவங்களாக இருப்பவர்கள் ஜாக்கிசான், அர்னால்ட். அவர்கள் இணைந்து நடித்துள்ள ‘அயர்ன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ஜாக்கிசான், அர்னால்ட் நடித்துள்ளனர். டிராகனை அழித்து மகாராணியைக் காப்பாற்ற ஜாக்கிசான் சீனா செல்கிறார். ஜாக்கிசானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார்.

பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் பயங்கரமாக மோதுகின்றனர். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியைக் காப்பாற்றினார்களா என்பது கதை. தமிழில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Tags : Jackisan ,Arnold ,
× RELATED பணக்காரர்கள் பட்டியல்- முதலிடத்தை இழந்தார் மஸ்க்